All
கிழக்கு செய்திகள்
நல்லாட்சியை கண்டித்து சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் வைவைக்கும் அரசை கண்டித்து ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாபாடு செய்த பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை(11) சம்மாந்துறையில் இடம்பெற்றது.
ஜூம்ஆத் தொழுகையினை தொடர்ந்து சம்மாந்துறைஅல்- மர்ஜான் மகளிர் கல்லூரி முன்பாக ஆரம்பமாகி ஹிஜ்ரா சந்தியில் சுமார் ஒரு மணிநேரம் வரை இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு கிளைகளின் அங்கத்தவர்கள், பிரதிநிதிகள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பெருந்திரளான முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு “முஸ்லிம் தனியார் சட்டத்தினை உடனடியாக நீக்கு”,
வெள்ளையனை திருப்பதிப்படுத்த நாட்டின் அடிப்படைச் சட்டங்களை மாற்றலாமா”, “2005இல் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைத்தபோது முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தவில்லையா”, மனித உரிமை எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின் சட்டத்தில் மூக்கை நுளைப்பதை இடமளியோம்”, “கபட நாடகத்திற்கு எதிராக அரசாங்கத்தை கண்டிக்கின்றோம்”, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்களின் இறைமையை கேள்விக்குறியாக்க முனையக்கூடாது”.
போராடுவோம், போராடுவோம் உரிமைகளை காக்க போராடுவோம்”, போன்ற வாசகங்கள் அடங்கிய எதிர்ப்பு பதாகைகளை ஏந்திவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.







0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.