Headlines
Loading...
தனது திருட்டை மறைக்க ரவி புத்தரை,இயேசுவை,குர்ஆனை உதவிக்கு அழைத்துள்ளார்.

தனது திருட்டை மறைக்க ரவி புத்தரை,இயேசுவை,குர்ஆனை உதவிக்கு அழைத்துள்ளார்.





தனது திருட்டை மறைப்பதற்காக ரவி கருணாநாயக்க அல் குர்ஆனின் வசனங்களை உதவிக்கு அழைத்துள்ளமை மிகவும் மோசமான செயற்பாடு என அனுர குமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

செய்யும் திருட்டை செய்துவிட்டு புத்த பொருமானின் போதனைகளையும்,ஏசு கிரிஷ்துவின் வாழ்கையையும் , அல் குர்ஆன் வசனங்களையும் ஒரு மகா திருடன் தனது திருட்டை மறைக்க உதவிக்கு அழைத்துள்ளமை கேவலமான செயலாகும். 

இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விமர்சனத்தை வெளியிட்டார்.

முன்னதாக பினைமுறி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க 

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.

தான் பதவி விலகுவது தொடர்பில் கவலைப்படவில்லை என்றும் இந்த சபைக்கு கௌரவமளித்து தனது பதவி விலகுவதில் பெருமைப்படுவதாகவும் ரவி கருணாநாயக்க தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

‘நிச்சயமாக சத்தியம் வென்றே தீரும் அசத்தியம் அழிந்தே தீரும்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் படி நிச்சயம் சரியான தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் ஆற்றிய உரையில் அவர் கூறியிருந்த நிலையில் அனுர குமார இவ்வாறு விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.