ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரவித்தார்.
இது தொடர்பில் வினவிய போதே அமைச்சர் கேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்போது முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இவ்வருடம் பல்வேறு தேர்தலுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது தயாராக வேண்டியுள்ளது. இதன்போது கட்சியின் செயற்திறனை அதிகரிக்க வேண்டியுள்ளது.
தற்போது அமைச்சு பதவிகளில் ஈடுப்பட்டு வருபவர்களினால் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது. ஆகையால் இதற்காக கட்சியில் புதிய பதவிகளை நாம் நியமனம் செய்யவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.