Headlines
Loading...
மதுபானம் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வந்துவிட்டன – ஹாபிஸ் நசீர்  hh5

மதுபானம் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வந்துவிட்டன – ஹாபிஸ் நசீர் hh5

மதுபானம் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வந்துவிட்டன – ஹாபிஸ் நசீர்

hh5
கல்குடா பிரதேசத்தில் மதுபான தொழிற்சாலை ஆரம்பிக்க இயந்திரங்கள் சில கொழும்பு துறைமுகத்தில் வந்தடைந்ததாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குடிநீர் விநியோக திட்ட அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கல்குடா பிரதேசத்தில் மதுபான தொழிற்சாலை ஆரம்பித்து வைக்கப்படுமா என்ற கேள்வி எம் எல்லோர் மத்தியிலும் உள்ளது.
நான் முதலமைச்சராக இருக்கும் வரைக்கும் இந்த மதுபானசாலைக்கு இடமில்லை அவ்வாறு வருவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.
எந்தவொரு பாரிய அழுத்தங்களும் மத்திய அரசில் இருந்து வந்தாலும் அவற்றை நிறுத்துவதற்கான முழு நடவடிக்கையும் எடுக்கப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். நான் வாழைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஏற்கனவே ஒரு தீர்மானம் எங்களது மாகாண சபையால் எடுத்து அதனுடைய அறிவுறுத்தலை நாம் வழங்கியிருந்தோம் செயலாளருக்கு இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அதற்கு செயலாளர் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கின்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அந்த தொழிற்சாலையை மீண்டும் தொடர்ச்சியாக கட்டுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்திருக்கின்றது.
இன்றும் எனக்கு ஒரு தகவல் கிடைத்தது இதற்குரிய முக்கியமான இயந்திரம் துறைமுகத்தில் வந்தடைந்ததாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எது வந்தாலும் நிச்சயமாக இந்த மதுபானசாலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையை நாம் கிழக்கு மாகாண மக்களுக்கு கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றத
அனைவருக்கும் தெரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ம் ஆண்டுக்கு பின் யுத்தம் முடிவடைந்ததன் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபாவனை வீதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
ஆகவே அவற்றை நிறுத்த வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. அதே நேரத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது வறுமை வீதத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது இடத்தில் உள்ளது.
வறுமைக்கோட்டின் கீழ் இருந்து கொண்டு மதுபோதையில் மூன்று மடங்காக அதிகரிக்கின்ற மாவட்டமாக இருக்கும் போது எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்ற ஒரு நிலமை காணப்படுகிறது இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நான் எமது பிரதேச சபை செயலாளருக்கு ஒரு படி மேலாக உத்தரவிட்டுள்ளேன் நீதிமன்றம் சென்றாயினும் அதற்கான தடை உத்தரவை எடுக்கும் படி உத்தரவிட்டு இன்று செயலாளர் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த மதுபானத்தை நிறுத்த வேண்டிய செயற்பாடு எவ்வாறு உள்ளதோ அதேபோல் இதை செயற்படுத்துகின்ற நிறுவனத்திற்கும் உள்ளது.
அதேபோன்று அரசாங்கத்திற்கும் உள்ளது. ஜனாதிபதி, பிரதம மந்திரி நாம் இவ்விடத்தில் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.
உடனடியாக எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் இது ஒரு போதும் செயற்படுத்தப்பட முடியாது என்ற விடயத்தை தெரிவித்து கொள்வதோடு அவர்களும் இதற்கு எந்தவித துணையும் போகக்கூடாது என்ற ஒரு பணிப்புரை அல்லது வேண்டுகோளை விடுப்பதோடு இதை நிறுத்துவதற்கான நடைவடிக்கையை ஜனாதிபதியும் பிரதமரும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என கிழக்கு மாகாண முதமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.