
All
Local News
வடகிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானது : அமெரிக்க அரச அறிக்கை
தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளும் இனவாத பௌத்த தேரர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அமெரிக்க அரச திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையில் வடக்கு, கிழக்கில் நடைபெறும் இனவாத நடவடிக்கை குறித்து இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌத்த குழுக்கள் மற்றும் இராணுவத்தினரால் வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு ஏகாதிபத்தியக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தம் எனவும், சிறிய அளவிலான பௌத்தர்களுக்காக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.