
ஸ்ரீலங்காவில் இணைய சேவை தொடர்பில் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதனை நிதியமைச்சு இன்று தெரிவித்துள்ளதுடன், இந்த வரி நீக்கம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.
இதேவேளை சிறிய ரக லொறி மற்றும் சிறிய ரக கெப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உற்பத்தி வரி 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை 10 இலட்சம் ரூபாவாக காணப்பட்ட வரி 7 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை நிதியமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுக்கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 90 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கான வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.