
All
கிழக்கு செய்திகள்
நிந்தவூர் பிரதான வீதியில் கனரக வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி.
நிந்தவூரிலுள்ள கல்முனை – அக்கரைபபற்று அதிவேக பிரதான வீதியில் கனரக வாகனமொன்று, மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தருடன் மோதியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று இன்றிரவு(24) நிந்தவூரில் இடம் பெற்றுள்ளது.
நிந்தவூர்-12ம் பிரிவைச்சேர்ந்த ஏ.எல்.சுல்தான் (வயது-65) என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக மறணத்தைத் தழுவியவராவார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
நிந்தவூரிலுள்ள லக்சிறி சேவா ஹார்க்கோ லிமிட்டட் நிறுவனத்திற்கு கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றி வந்த கனரக வாகனமே அது திரும்பிச் செல்லும் போது, மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த குடும்பஸ்தர் சுல்தானை மோதியதாகவும், கீழே விழுந்த அவரது உடலின் மேலால் வாகனம் ஏறி இறங்கியதாகவும் நேரில் கண்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
(இச்செய்தி அச்சிடும் இந்நேரம் பி.பகல் 12.30 மணி வரை) சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கனரக வாகனமும் சம்மாந்துறைப் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.