
All
Local News
கண்டியில் நுாற்றுக் கணக்கான இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்
கண்டியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சுமார் 850 இராணுவத்தினரும், 128 பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்கவை மேற்கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
250 இராணுவத்தினர் தயார் நிலைமையில் உள்ளனர் என்றும், தேவை ஏற்படின் உடனடியாக இராணுவத்தினரை ஏனைய இடங்களில் இருந்து அழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ்தினருக்கும், பொலிஸாருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.