
தனக்கு எதிராக செயற்பட்ட பிரதியமைச்சர் ஹரீஸை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மூக்குடைந்த சம்பவம் ஒன்று அரங்கேறியமை அம்பலமாகியுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கு எதிராகவும், முன்னாள் சட்ட ஒழுங்குகள் அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து போராடிய பிரதியமைச்சர் ஹரீஸ் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பிரதமர் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக பிரதமருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்.
இதன் காரணமாக குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை சென்ற 11ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் “ஹரீஸுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும், கட்சியின் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூட்டத்தில் பிரேரணை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது, பிரதியமைச்சர் ஹரீஸுக்கு ஆதரவான கருத்துக்கள் மேலேங்கியதால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும், நிசாம் காரியப்பரும் அவரை சார்ந்த சிலரும் ஒழுக்காற்று நடவடிக்கை முயற்சியில் தோல்வியடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.