Headlines
Loading...
ரணிலின் பஸ்ஸில் முன் ஆசனத்திலிருந்து பயணித்த அதாஉல்லா !

ரணிலின் பஸ்ஸில் முன் ஆசனத்திலிருந்து பயணித்த அதாஉல்லா !




கடந்த சில நாட்களுக்கு முன்பாக “நெற்றிக்கண்” என்ற விவாத மேடை நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்கள் தற்கால அரசியல் கள நிலவர நிலைப்பாடு விடயமாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பக அந்த கருத்துக்கள் பற்றியும் அதற்கான சில மறுப்புக்களையும் சில தர்க்க ரீதியான கருத்துக்களையும் அவருக்கு தெளிவுபடுத்துவதுடன் மக்களும் தெளிவு பெறுவதற்காக குறிப்பிட்ட சில விடயங்களை சுட்டிக்காட்துவதன் ஊடாக அவருக்கான நினைவுபடுத்தலாகும்,

கடந்த பதினாறு வருடங்களுக்கு முன்னர் மிக தீர்க்க தரிசனமாக ரணில் விக்கிரமசிங்க செலுத்தும் வாகணத்தில் ஏற வேண்டாம் என்று மறைந்த தலைவர் கூறினாரோ அன்றிலிருந்து அந்த தலைவனின் வேண்டுகோளைத்தான் தனது சகல முன்னடுப்புக்களிலும் முன்னிளைப்படுத்துவதாகவும், மறைந்த தலைவரின் கொள்கையில் இருந்ததால்தான் தேசிய காங்கிராஸ் கணிசமான அதன் அடைவுகளை பெற்றுக்கொண்டதாகவும் தொரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்கள்.

ஆனால் அன்று அந்த தலைவர் சொன்ன தீர்க்க தரிசனம் மிகவும் உண்மையாகவும் அன்றைய கால அரசியல் சூழ்நிலைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட சில அரசியல் அநீதிகளை கருத்தில் கொண்டும் அன்றைய அரசியல் முன்னெடுப்புக்கான நிலைப்பாடகவும் காலசுழலுக்கு ஏற்ப அவருடைய தீர்க்க தரிசனமும் சமூகம் பற்றிய தூர சிந்தனையும் அக்கால அரசியல் அடைவுக்கான இராஜதந்திரமாகவும் இருக்கலாம்.

ஆனால் நீங்கள் அந்த தீர்க்க தரிசனம் பற்றி அடிக்கடி கூறி உங்களுடைய சுயநல சந்தர்ப்பவாததிற்கு மக்களை ஏமாற்றும் காய்நகர்த்தல் அரசியலுக்காக பயன்படுத்வதும், அந்த தலைவரின் தீர்க்க தரிசனத்தை ஏற்று அதன் படி செயற்பட்டு வந்து இருக்கின்றீர்களா ? என்கின்ற கேள்வியும் கட்சியின் கொள்கையுடன் செயற்பட்டீர்காளா ? என்ற சந்தேகமும் மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது,

ஏன்னென்றால் கடந்த 2002ம் ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் ரணில் –பிரபா சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகத்தை சிறு குழுக்கள் என்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்த விதமான விடயங்களோ அல்லது முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களுக்கான தீர்வுகள் வழங்கப்படவும் இல்லை ஏற்படப்போகும் சமாதான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக தனித்தரப்பாக கலந்து கொள்வதற்கான எந்த சந்தர்ப்பமும் தரவில்லை என்ற காரணத்தை முதன்மைப்படுத்தி சமூகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்ற நியாயத்தை கூறினீர்கள்.

ஆனால் உங்களின் ஆசீர்வாதத்துடன் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹக்கீம் அவர்கள் அன்று ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு அரச பிரதிநிதியாக சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி முஸ்லிம்களை நோர்வே அரசும் ரணில் அரசும் புறக்கணித்து விட்டார்கள் என்ற காரணத்தை காட்டி கட்சியின் மீதும் ஹக்கீமின் மீதும் ரணில் அரசின் மீதும் குற்றம் சுமத்தி விட்டு கட்சியில் இருந்து பிரிந்து வந்து சமூக நலன் என்பது மட்டும் அல்லாமல் இந்த சமாதான ஒப்பந்தத்தில் முஸ்லிம்ளை புறக்கணித்து விட்டார்கள்

தனித்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முஸ்லிம் சமூகம் இழுத்தடிப்பு என்று கூறினீர்கள். மறு கணம் எந்த அரசின் மீது குற்றம் கூறி முஸ்லிம்களை புறக்கணித்ததோ அந்த ரணிலின் அரசுடன் போய் அமைச்சுப்பதவியையும் ஆடம்பர வாழ்க்கையையும் பெற்றுக் கொண்டு அந்த நோர்வேயின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு ரணிலின் பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்து கொண்டு பயணித்து மாத்திரமின்றி

அதன் பின் 2005ம் ஆண்டு நடந்த மகிந்தவின் .ஆட்சியின் போதும் புலிகளுக்கும் அரசுக்கும் ஜெனிவாவில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளிள் முஸ்லிம்களுக்கு மீண்டும் தனித்தரப்பு மறுக்கப்பட்ட போது அந்த அரசுடன் ஒட்டிக்கொண்டு முஸ்லிம்களின் விடயத்தில் அரசு சரியாக நடந்து கொள்ளும் அதனால் நாங்கள் தனித்தரப்பு விடயம் சம்மந்தமாக எதுவும் யோசிக்க வேண்டியதில்லை என்று மகிந்தவின் ஆட்சிக்கும் அன்றைய சமாதான ஒப்பந்தத்தையும் நியாயப்படுத்தினீர்கள்..

இவ்விடத்தில் என்ன வேடிக்கை என்றால் இரண்டு தலைவர்களும் (ரணில்- மகிந்த) முஸ்லிம்கள் தனித்தரப்பான பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்கவில்லை என்ற விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தார்கள் என்பதை மறந்தது மட்டுமில்லாது தலைவரின் தீர்க்க தரிசனத்தையும் கொள்கையையும் அவ்விடத்தில் புதைத்து விட்டு மகிந்தவின் அரசை சரி கண்டு உங்கள் சுய நல அரசியல் பதவிக்காக முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றினீர்கள்

அப்படி என்றால் மறைந்த தலைவரின் கொள்கையும் வழிகாட்டலும் முஸ்லிம் சமுகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டப்பட்டாத? அல்லது உங்கள் பதவிக்காக மக்களை ஏமாற்றி னீர்களா? இதில் எவ்விடத்தில் தலைவரின் தீர்க்க தரிசனம் நிலைநாட்டப்பட்டது அல்லது அவரின் வழிகாட்டலாக இதனை ஏற்றுக் கொண்டீர்களா ?.

l3 வது அரசியல் திருத்தச்சட்டம் மாகாணசபை அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் போன்ற விடயங்களையும் இதனால் மாகாண சபை ஆட்சிகளின் அதிகாரங்கள் நீக்கப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் போன்ற விடயங்களை பேசுகிறீர்கள்.

ஆம் உண்மைதான் உங்கள் போலியான சமூக உணர்வுக்கு தற்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அதிகார திருத்தச்சட்டங்களுக்கு முன் கடந்த மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அதாவது நீங்கள் பதவியில் இருந்த போது கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளுக்காக வழங்கப்பட்டு இருந்த குறைந்த பட்ச அதிகாரங்களை பறித்தெடுக்கின்ற திவநகுமென என்ற ஒரு வகையான சர்வதிகார சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளினதும் l3 வது அரசியல் திருத்தச்சட்டத்தையும் தனது கட்டுப்பாடுக்குள் மகிந்தவின் ஆட்சியில் கொண்டுவருவதற்கு பக்க பலமாக உங்கள் கட்சி மாகனசபையிலும் மத்திய அரசில் நீங்களும் ஆதரவு அளித்தீர்கள்.

அது மட்டுமில்லாது பதினெட்டாவது திருத்தசட்டம், உயர் நீதியரசர் சிராணி அவர்களுக்கு எதிரான நம்பிக்ககையில்லா பிரேரனை மற்றும் நாட்டின் நலனுக்கு முரணான தனிநபர் நலனுக்கான பல சட்டங்கள் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் உள்ளுராட்சி தேர்தல் முறை மாற்றம் என பல்வேறு அரசியல் அதிகார துஸ்பிரயோகங்களுக்கு நேரடியாக சற்றும் சமூக நலனோ அல்லது நாட்டின் நன்மை கருதியோ தூரநோக்கோ எவைகளையும் பற்றி சிந்திக்காமல் மகிந்தவின் கட்டளையை நிறைவேற்றி விட்டு மக்களிடம் எதுவும் தெரியாதது போல் இதுவரையும் நடித்து வருகின்றீர்கள்.

அதுமட்டும் இல்லாமல் தற்போதைய கிழக்கு மாகாண சபைக்கான ஆட்சிக் காலத்தை நீடிப்பது தொடர்பான விடயங்களை அரசு மேற்கொள்ளும்போது சட்டரீதியான பிழை என்று கூறுகின்ற நீங்கள் கடந்த கிழக்கு மாகாணயின் ஆட்சிக் காலம் (பிள்ளையான் முதலமைச்சராக இருந் காலத்தில்) முடிவைடைய ஒருவருடம் இருக்கும்போது அதற்கு முன் மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று மகிந்தவின் தேவைக்காக எடுத்த முடிவுக்கு உங்கள் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு மகிந்தவால் கிடைத்த மேலதிகமான அன்பளிப்பை பொற்றுக்கொண்டு

சுய விருப்பத்தின் பெயரில் கையொப்பம் இட்டு மாகாணசபை கலைப்பதற்கு அனுமதித்தார்களே மக்களின் வாக்குகளை பெற்ற அந்த உறுப்பினர்கள் தங்கள் சுய நலத்திற்காகவேதான் மக்களை ஏமாற்றினார்கள். அப்போது உங்களுக்கு புரியவில்லையா இது சட்டத்திற்கு முரணானது மக்களின் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று. பதவியில் இருந்த காலத்தில் பதவியை பாதுகாப்பதற்காக சட்டத்தில் எந்த மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ சிறுபான்மைக்கு எதிரான அநீதிகளோ வந்தாலும் எதையும் கண்டும் காணதது போல்

மக்களுக்கு முன் வீராப்பும் ஆட்சியாளர்களுக்கு முன் பொட்டிப்பாம்பாகவும் அடங்கிக் கிடந்த நீங்கள் தற்போது அரசியல் விழிர்புணர்வு என்றும்,நீதியான தலைமை என்றும், தீர்க்க தரிசன அரசியல் என்றும்,மறைந்த தலைவரின் பாசறை என்றும் அவரின் வழிகாட்டல் என்றும் மக்களை ஏமாற்றி எப்படியாவது மீண்டும் ஒரு பதவி அதிகாரத்தை அடைந்து கொள்வதற்காக மக்களை ஏமாற்றும் கபட நாடக முயற்சியே தவிர,

உண்மைக்கு உண்மையாக மக்களின் நலனின் அக்கறை இருந்திருந்தால் கடந்த காலங்களில் மேலே குறிப்பிட்ட அநீதிகள் நடந்தேறிய போது அதற்கு ஒருவார்த்தையாவது அரசுக்கும் அந்த அநீதிகளை அரங்கேற்றி யவர்களுக்கும் எதிராக பேசி இருந்தால் இன்று நீங்கள் கூறும் தலைவரின் நீர்க்க தரிசனம் அவரின் கொள்கைகள் வழிகாட்டல்களை பின்பற்றி நடந்த தலைவர் நீங்கள் என்கின்ற உன்னத மரியாதையும் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த தலைவனாக உங்கள் முன்மாதிரியை காட்டிருக்கலாம்.

அவ்வாறான சிறந்த முன்மாதிரியான சமூக நலனுக்கான எந்த கடமைகளையும் செய்யாமல் பிரதேச வாதத்தையும் இன வாதத்தையும் அரசியல் மூலதனமாக வைத்துக்கொண்டு இருந்த நீங்கள் இன்று பிரதேசத்திற்கு அப்பால் அரசியலில் கண்முழிக்க தொடங்கி இருக்கின்றீர்கள்.
ஆம் காலம் கடந்த ஞானம் என்றாலும் பதவிக்காக மக்களை ஏமாற்றாமல் உண்மை நீதி நியாயம் சட்டம் ஒழுங்கு சமூக ஒற்றுமை சமூகநீதி போன்ற அடிப்படை விடயங்களில் மக்களை விழிர்ப்பூட்டுங்கள்.

அதன் மூலம் மக்களால் ஏற்படுத்தப்படும் அரசியல் மாற்றங்களால் நம் சமூகத்தின் எதிர்கால அரசியலில் பல நல்ல மாற்றங்களை காண முடியும். அப்போதுதான் நீங்கள் அடிக்கடி கூறும் மறைந்த தலைவரின் தீர்க்க தரிசனமும் கொள்கையும் வழிகாட்டலையும் நடைமுறைப்படுத்தினோம் என்கின்ற மன நிறைவும் சந்தேசமும் பதவி அதிகாரங்களுக்கு அப்பால் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்

:அல்லாஹ் நம் அனைவரினதும் தூய பணிகளை அங்கீகரித்துக் கொள்வானக ஆமீன் ...அமீன்”

முகம்மத் அன்ஸார்

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.