கொழும்பு மாவட்ட மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல ஆண்டு காலமாக வாக்களித்தபோதும் கடந்த 25 ஆண்டு காலப் பகுதியில் அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குற்றஞ் சுமத்தியுள்ளார்.
புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்துடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார் அவர். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சில பக்கங்களைக் காணவில்லையென சிலர் கூக்குரலிடுகின்ற னர். அதில் பக்கங்கள் எதுவும் குறைவடையவில்லை.
சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை அந்த ஆவணங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அதனை வெளியிடுவதன் மூலம் குற்றஞ் சுமத்தப்பட்டிருப்பவர்கள் நன்மை அடைவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.
மேலும், கொழும்பு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அனைவரும் பொறுப்புக் கூற வேண் டும். நகரத்தை அழகாகவும் தூய்மையாகவும் பேணுகின்ற அதேநேரம் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவது மிகவும் அவசியமாகும்.
புறக்கோட்டை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளினதும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான நிகழ்ச்சித் திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவேன் என்றார்.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.