Headlines
Loading...
மன்சூரின் மூத்த போராளி என்ற நாமம் களங்கப்பட்டு விட்டதா?

மன்சூரின் மூத்த போராளி என்ற நாமம் களங்கப்பட்டு விட்டதா?



( ஹபீல் எம்.சுஹைர் )

மு.கா அரசியல் வாதிகளை அவதானித்தால், அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக கட்சி மாறி, மீண்டும் வேறு வழியில்லாமல் மு.காவில் வந்து இணைந்திருப்பார்கள். இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களில், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் மாத்திரமே கட்சி மாறாமல், மு.கா என்ற கட்சியோடு இருப்பவர் என்ற பேச்சு உள்ளது.
இதன் காரணமாக, இவர் எல்லோராலும் மூத்த போராளி என்றும் அழைக்கப்படுகிறார். அது மாத்திரமன்றி, இந்த விடயமே இவர் பல இடங்களில் வாக்குப் பெறவும் காரணமாக அமைகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தன்னோடு இணைந்துகொள்ள விரும்பியதாகவும், தான் அவரை அக் கட்சியிலேயே இருக்குமாறு கூறியதாகவும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் நௌசாத் குறிப்பிட்டுள்ளார். இவ் விடயமானது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூரின் மூத்த போராளி என்ற நாமத்தின் தரத்தை குறைத்துக்கொள்ளச் செய்துள்ளது.
இதில் உள்ள இன்னுமொரு விடயம் என்னவென்றால், அவர் கட்சி மாறாமல் இருக்கவில்லை. கட்சி மாற வழி இல்லாமலேயே இருந்துள்ளார் என்பதாகும். இதன் உண்மை தன்மையை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் எதிர்வரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.