
All
Local News
கண்டியில் நடக்கும் வன்முறையை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
கண்டி மாவட்டத்தில் நடக்கும் இனம் கலவரத்தை எதிர்க்கும் வகையில் தலைநகரமான கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
புரவெசி பலய அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இனவாத செயற்பாடுகள் நாட்டை பின்நோக்கி கொண்டு செல்லும் என எச்சரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், நாடு மீண்டும் இரண்டாக பிளவடைய தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிபடுத்த அரசாங்கம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
ok
ReplyDelete