Headlines
Loading...
ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா?சர்ச்சைகுள்ளாக்கிய புகைப்படம்

ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா?சர்ச்சைகுள்ளாக்கிய புகைப்படம்




ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

தனது ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக ஞானசார தேரரை ஜனாதிபதி அழைத்துச் சென்றாரா அன்றேல் ஜப்பானிற்கு சென்றிருந்த ஞானசார தேரர் ஜனாதிபதி வருகையை அறிந்து அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரா என்ற கேள்விகளை சமூகவலைத்தள பயனாளர்கள் எழுப்பியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறைகளுக்கு தூபமிடும் வகையில் பிரசாரங்களை மேற்கொள்வதாக கடும் சர்ச்சைக்குரியவராக நோக்கப்படுபவர் ஞானசார தேரர்.

அளுத்கமவில் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு பிரதானமான காரணம் என கடும் கண்டனங்களுக்கு ஆளான போதும் இவருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks JVP NEWS

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.