
All
Local News
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரும் ஐ.நா
சிறிலங்காவில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை தொடர்பாக, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும், அண்மைய இன வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நா கவலையடைந்துள்ளது. இந்தச் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறது.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதை உறுதி செய்யுமாறும், மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், அதிகாரிகளையும், அனைத்து இலங்கையர்களையும் ஐ.நா கோருகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.