Headlines
Loading...
தமிழ் மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது தடுக்க பள்ளிவாசல் நிருவாகம் ஒத்துழைக்கவில்லை.

தமிழ் மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது தடுக்க பள்ளிவாசல் நிருவாகம் ஒத்துழைக்கவில்லை.





கல்முனை நற்பட்டிமுனை சந்தியில் தமிழ்மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது கலவரம் ஏற்படாது தடுக்க நற்பட்டிமுனை பள்ளிவாசல் நிருவாகத்தினை அழைத்து அவர்கள் வருகை தராமை எமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த கலவரம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நற்பட்டிமுனை சந்தியில் இருந்து சில காடையர்களால் தமிழ் மக்களின் வீடுகளுக்கு கற்களை வீசி சேதப்படுத்தியமையும் வீட்டில் இருந்த பெண்களுக்கும் கல் வீச்சுத் தாக்குதல் நடாத்திய சம்பவம் அறிந்து அங்கு கலவரம் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் நற்பட்டிமுனை பள்ளிவாசல் முக்கியஸ்தர்களை அழைத்தும் வருகைதராதது சந்தேகமும் கவலையுமாக இருக்கின்றது .

செவ்வாய்க்கிழமை மதியம் நற்பட்டிமுனை சந்தியில் முஸ்லிம்களால் டயர்கள் எரித்து பதட்டம் ஏற்பட்டமையினால் அவ்விடத்திற்குச் சென்ற கல்முனை மாநகரசபை உறுப்பினர் கென்றிமகேந்திரன் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஏகாம்பரம் நற்பட்டிமுனை ஆலயங்களின் தலைவர்கள் உட்பட எமது தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் நற்பட்டிமுனைச் சந்திக்குச் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள தமிழர்களின் மூன்று கடைகளும் உடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் தமிழ் முஸ்லிம் கலவரம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்குள்ள பள்ளிவாசல் நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு வருகைதருமாறு நீண்டநேரம் காத்திருந்தும் அவர்கள் வருகைதரவில்லை


நாம் அவர்களை அழைத்ததன் நோக்கம் தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவேதான் இந்தத் தீர்மானத்தினைத்தான் எமது தலைமைகளும் கடைப்பிடித்து வருகின்றனர் அதன் நிமிர்த்தம் நாம் அவர்களை அழைத்தும் வருகைதராமையினால் அங்கிருந்து நாம் மனவேதனையுடன் வெளியேறிச் சொன்றோம்.

பள்ளிவாசல் நிருவாகம் அங்கு வருகைதந்திருந்தால் நாம் பேச்சு நடாத்தி எங்களுக்குள் மேலும் பிரச்சினை வருவதனை தடுக்கும் வழியாக அமைந்திருக்கும்

0 Comments:

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.