All
Local News
தாக்குதல் தாரிகள் வெளிமாவட்டங்களில் இருந்து வருவதாக ரணில் ஜோக் அடித்துள்ளார்
முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால் ரணில் விக்ரமசிங்கவுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பேசுவது அவர் இன்னமும் கனவுலகில் இருப்பதையே காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களுக்கெதிரான கலவரம் அம்பாரை முதல் கண்டியையும் தாண்டி முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், சொத்துக்கள் எரிக்கப்படுள்ள நிலையில் இனித்தான் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சொல்வது இறந்தவனுக்கு உயிர் தர வேண்டும் என வைத்தியரைப்பார்த்து சொல்வது போன்றதாகும்.
கலவரங்களை அரசு கட்டுப்படுத்தவுமில்லை என்பதுடன் கலவரக்காரர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
வடக்கில் புலிகளின் இருப்பிடங்களையும், பதுங்கு குழிகளையும் ராடார் மூலம் கண்டு பிடிக்க முடியுமான பாதுகாப்பு தரப்புக்கு பட்டப்பகலில் தாக்குதல் மேற்கொள்ள வரும் நூற்றுக்கணக்கான சிங்கள காடையர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது உலக மகா கோமாளித்தனமாகும்.
அது மட்டுமல்லாமல் தாக்குதல் தாரிகள் வெளிமாவட்டங்களில் இருந்து வருவதாக ரணில் மற்றுமொரு ஜோக்கை அடித்துள்ளார். நல்ல வேளை இலங்கைக்கு அருகில் கடல் எல்லை இல்லாத இன்னொரு நாடு இல்லை. இருந்திருந்தால் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சொலியிருப்பார்.
வெளிமாவட்டட்திலிருந்து தாக்குதல்தாரிகள் கண்டிக்கு வருவதாயின் ஓரிரு நிமிடத்தில் வர முடியுமா? இடையில் எத்தனை பொலிஸ் நிலையங்கள் உள்ளன என்பது தெரியாதா? ஏன் அந்த பொலிசாரை களத்தில் இறக்கி தாக்க வருவோரை கைது செய்ய முடியவில்லை? தாக்க வரும்போதாவது முடியவில்லை என்றால் தாக்கியபின் அவர்கள் கலவரக்காரர்கள் என்பது தெரியுமல்லவா.
ஆகவே ரணில் விக்ரமசிங்க மிக நன்றாகவே முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வஞ்சித்து விட்டார். கலவரங்களை அவர் கட்டுப்படித்தவே இல்லை. அழிவுகளே எஞ்சியுள்ளன. இந்நிலயில் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக இதோ தீர்மானம் நிறை வேற்றி விட்டோமென சொல்வதற்கு பதிலாக கட்டுப்படுத்த முடியாவிட்டால் தீர்மானம் எடுப்போம் என ஹரீஸ் கூறுவது சிரிப்பைத்தருகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
0 Comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.